உபி மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: காரணம் இதுதான்!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (07:29 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் பள்ளிகள் கல்லூரிகள் திறந்த நிலையில் தற்போது மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஃபதேபூர், பிரதாப்கர் ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளத்தில் நகரமே தத்தளித்து வருகிறது. ஒரு சில வீடுகளின் சுவர் இடிந்ததால் 12 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை நீடித்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இன்னும் இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து அங்கு மீட்பு படைகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்