பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமானார்: தமிழார்வலர்கள் இரங்கல்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (07:26 IST)
பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமானார்: தமிழார்வலர்கள் இரங்கல்
பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமானதை அடுத்து அவருக்கு தமிழ் ஆர்வலர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 
 
கவிஞர் ஜெ. பிரான்சிஸ் கிருபா ஒரு தமிழ் நவீன கவிதை எழுத்தாளர். இவர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பு மட்டுமே பயின்றுள்ளார்.
 
கவிஞர் பிரான்சிஸ் கிருபா கவிதை, புதினம் எழுதியுள்ளார். மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினம் எனும் வகைப்பாட்டில் விருது பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது 
 
இந்த நிலையில் இன்று கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமானதை அடுத்து நெல்லை மாவட்டத்தில் அவர் சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்