இதுதான் பத்திரிகை தர்மமா மிஸ்டர் துக்ளக் குருமூர்த்தி? உதயநிதி காட்டம்!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (12:33 IST)
துக்ளக் பத்திரிக்கையில் வெளியான ஒரு புகைப்படத்தை கண்டு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். 
 
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலையீட்டின் பெயரில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.
 
அதன்படி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரையும் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. 
 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து துக்ளக் ஒரு அட்டைப்படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இதனை கண்ட திமுக இளைஞர் அணி செய்லாளர் உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில், அப்பாவி இருவரை அடித்தே கொன்றுள்ளனர். நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காடுகிறது. 
மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள். இச்சூழலிலும் இக்கொலையை நகைச்சுவையாக அட்டைப்படமாக்க முடிகிறது எனில் உங்களின் தமிழர் விரோத, துரோகத்தை புரிந்துகொள்ள முடிகிறது. இதுதான் பத்திரிகை தர்மமா? என துக்ளக் குருமூர்த்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்