போலீசாரின் மன அழுத்தத்துக்கு முதல்வரும் ஒரு காரணமோ? உதயநிதி ஸ்டாலின்

திங்கள், 29 ஜூன் 2020 (07:27 IST)
சமீபகாலமாக போலீசார்களின் வன்முறை கட்டுக்கடங்காமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. உச்சக்ட்டமாக சாத்தான்குளம் சம்பவம் போலீஸ் மீதான மரியாதையையே குறைத்துவிட்டது. இந்த நிலையில் போலீசார்களின் வன்முறைக்கு முதல்வரும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
சாத்தான்குளத்திலிருந்து மதுரை வழியாக சென்னை வந்துகொண்டிருந்தோம். சேலம் சாலையிலிருந்து சென்னைவரை சுமார் 250 கி.மீட்டருக்கும் மேல் இருபது அடிக்கு ஒருவரென கொளுத்தும் வெயிலில் ஆண், பெண் காவலர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர். ஊரடங்கு பணியோ என நினைத்தபடி காவலர்களிடம் விசாரித்தேன்.
 
சேலம் டு சென்னை செல்லும் முதல்வர் அவர்களுக்கான பந்தோபஸ்து’ என்றனர். முதல்வருக்கு பாதுகாப்பு அவசியமே. ஆனால் ஊரடங்கில் அனைவரும் வீடடங்கியுள்ள சூழலில் முதல்வரை யாரிடமிருந்து பாதுகாக்க இந்த பந்தோபஸ்து? காவலர்கள் சுழற்சிமுறையில் பணிசெய்யும் பேரிடர் சூழலில் இந்த ஆடம்பரம் அவசியமா?
 
சமீபகாலமாக அதிகரித்து வரும் போலீசாரின் வன்முறைக்கு இதுபோன்ற பணிச்சூழலும் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. காவலர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் வகையில் மணிக்கணக்கில் வேலையின்றி ஒரேயிடத்தில் நிற்கவைக்கப்படுவதை முதல்வர் அவர்கள் தவிர்க்கலாமே
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்