முதல்முறையாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டது பெருமை: உதயநிதி

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (14:01 IST)
முதல்முறையாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டது பெருமை: உதயநிதி
முதல் முறையாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டது தனக்கு பெருமையாக இருப்பதாக சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். இதனையடுத்து இன்று கூடிய முதல் சட்டமன்ற தொடரில் அவர் கலந்துகொண்டார். முதல் முதலாக சட்டமன்றத்தில் கலந்துகொண்ட அவருக்கு திமுக எம்எல்ஏக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது/ விரைவில் உதயநிதி ஸ்டாலின் தனது கன்னிப் பேச்சை சட்டமன்றத்தில் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று முதல் முறையாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டது தனது பெருமையாக இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்/ இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு இன்று தொடங்கியது.இதில் முதல்முறை பங்கேற்றது பெருமை அளிக்கிறது.பணியில் உள்ள பெண்களுக்கு மகளிர் விடுதிகள்-நீட் ஒழிப்பு..போன்ற ஆளுநர் உரையிலுள்ள அறிவிப்புகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு திட்டங்களுக்கு சான்றாகும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்