அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருக்கிறார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் இன்று வெளியிட்டுடள்ளார். மேலும் அலுவல் சாரா உறுப்பினராக மூன்று ஆண்டுகளுக்கு உதயநிதி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.