சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: இன்று பீகார் கோர்ட்டில் ஆஜராவாரா உதயநிதி?

Siva
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (06:46 IST)
சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன்  அனுப்பி இருந்த நிலையில் இன்று அவர் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசிய போது ’டெங்கு, கொசு போன்று சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்தன.  இந்த நிலையில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்  இந்த வழக்கில் பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக அமைச்சர் உதயநிதிக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.  

இந்த நிலையில் இன்று அமைச்சர்  உதயநிதி ஆஜர் ஆவாரா  அல்லது அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜர் ஆவாரா  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்