ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் திரும்பி பார்க்க வைத்த மாநாடு- அமைச்சர் உதயநிதி

Sinoj

வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (21:35 IST)
மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் நடைபெற்ற நம் திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாட்டின் வெற்றி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் திரும்பி பார்க்க வைத்தது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

 
''மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் நடைபெற்ற நம் திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாட்டின் வெற்றி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
 
கழக இளைஞரணி மாநில மாநாட்டின் நோக்கத்தையும் - அது தொடர்பான விழிப்புணர்வையும் தமிழ்நாடெங்கும் கொண்டு சேர்க்கும் விதமாக, #DMKRiders-ன் மாபெரும் இருசக்கர வாகனப் பேரணியை குமரியில் உள்ள வள்ளுவர் சிலை அருகே நவம்பர் மாதம் தொடங்கி வைத்தோம். 
 
வள்ளுவர் - பெரியார் - அண்ணா - கலைஞர் மண்டலங்கள் என தமிழ்நாடெங்கும் பயணித்து இளைஞரணி மாநாடு குறித்த விழிப்புணர்வை #DMKRiders பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தனர். 
 
குறிப்பாக, மாநாட்டுத் திடலில் நமது கழகத் தலைவர்  - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்பாக அணிவகுப்பு செய்து இரு சக்கர வாகனப் பேரணியை நிறைவு செய்தனர். 
 
கழக இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய #DMKRiders மற்றும் இப்பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களை இன்று நேரில் வாழ்த்தி குழுப்புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அவர்களின் கழகப்பணியைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினோம்''என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்