துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி சிகிச்சை!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (11:58 IST)
துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
மேலும் அவர்களுக்கு பரவியது உருமாறிய கொரோனா வைரஸா? என்பது குறித்து பரிசோதனை நடந்து வருகிறது. மேலும் துபாயில் இருந்து சென்னை வந்த இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
ஏற்கனவே நேற்று சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் உடனடியாக இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானத்தையும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்