வாடகைக்கு வீடு கேட்க போன நைஜீரிய இளைஞர்கள் கைது! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (08:14 IST)
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் என்ற பகுதியில் இரண்டு நைஜீரிய நாட்டின் இளைஞர்கள் வாடகைக்கு வீடு கேட்டு போன நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கேளம்பாக்கத்தில் நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 இளைஞர்கள் நேற்று வாடகைக்கு வீடு தேடி அலைந்தனர். அப்போது ஒரு வீட்டில் ‘வீடு வாடகைக்கு’ என விளம்பர போர்டு தொங்கியதை பார்த்ததும் அந்த வீட்டின் உரிமையாளரிடம் தங்குவதற்காக வாடைகைக்கு வீடு கேட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் என்பவர் ஒரு என்சிசி அதிகாரி என்பதால் அவர்களை பார்த்தவுடன் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை வீட்டின் உரிமையாளர் கேட்டுள்ளார். ஆனால் எந்தவித ஆவணங்களும் அவர்களிடத்தில் இல்லை என்பது தெரிய வந்தது

இதனையடுத்து அவர் உடனே அவர்களிடம் பேச்சு கொடுத்து கொண்டே காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். இதுகுறித்து காவல்துறையினர் விரைந்து வந்து இரண்டு நைஜீரிய இளைஞர்களையும் பிடித்து பின்னர் அவர்களை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் 2 இளைஞர்கள் மீதும் மதுரவாயில் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு இருப்பதாக தகவல் தெரிய வந்தது. கேளம்பாக்கம் பகுதிக்கும் அவர்கள் இருவரும் கொள்ளையடிக்கவே வந்திருக்கலாம் என்ற ரீதியில் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்