தமிழகத்தில் திமுகவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும், அதற்காக தமிழக வெற்றிக் கழகம் , நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இதற்கு மறைமுகமாக பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம், சேலம், போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.
மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்!
இந்தப் பதிவில், "மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது, எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பரவலாக கருதப்படுகிறது.