கடந்த 2020 ஆம் ஆண்டு சந்தா கோச்சாரின் ரூ.78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. முடக்கப்பட்ட இந்த சொத்துக்களை விடுவிக்க கோரி சந்தா கோச்சார் தீர்ப்பாயத்தில் முறையிட்ட நிலையில், சொத்துக்களை விடுவிக்க ஆரம்பத்தில் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம், சொத்துக்களை விடுவிக்க உத்தரவிட்ட அதிகாரிகளை கண்டனம் தெரிவித்ததுடன், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை உறுதி செய்தது.
லஞ்சம் பெற்றது உறுதியானதால், சந்தா கோச்சார் குற்றவாளிதான் என்றும் தீர்ப்பாயம் தற்போது திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு, வங்கி துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.