டெங்கு கொசுக்கள் சுத்தமான நீரில்தான் இனப்பெருக்கம் செய்யும். எனவே, குடிநீர் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதா, வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் இருக்கிறதா என்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-அக்டோபரில் அதிகரித்து, செப்டம்பர்-அக்டோபரில் உச்சம் பெறும். எனவே, டெங்கு சூடுபிடிக்கும் மாதங்கள் வரவிருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.