முதல்வர் உடல்நலக்குறைவுக்கு என்ன காரணம்? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

Siva

செவ்வாய், 22 ஜூலை 2025 (13:09 IST)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நல குறைவுக்கு காரணம் என்ன என்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
 
உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "முதலமைச்சர் இப்போது நன்றாக இருக்கிறார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தொடர்ச்சியாகப் பயணங்கள் மற்றும் 'ரோடு ஷோ' ஆகியவற்றை மேற்கொண்டதால்தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தலைசுற்றல் இருந்தது. 
 
மருத்துவர்கள் தற்போது அவரை நன்றாகப் பார்த்து கொள்கின்றனர். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். இரண்டு நாட்கள் மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். விரைவில் அவர் குணமடைந்து திரும்புவார். இன்றும் அவருக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட இருக்கின்றன" என்று தெரிவித்தார்.
 
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தலுக்கு முன் முதலமைச்சர் பூரண நலமடைவார் என திமுக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை முதலமைச்சரால் முழுமையாக களப்பணியில் ஈடுபட முடியாவிட்டால், உதயநிதி ஸ்டாலின் தான் தேர்தல் களத்தில் முழு பொறுப்பையும் ஏற்று சுற்றுப்பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்