அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் போல பேசி திமுகவை விமர்சித்தார்.
அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன பாடு படுத்தும், ஒரு பிரியாணி கடையை கூட விட்டு வைப்பதில்லை. பெண்களுக்கான பியூட்டி ஷாப் கூட அவர்கள் விடவில்லை. டீக்கடை மற்றும் பஜ்ஜி கடை கூட அவர்கள் விட்டு வைப்பதில்லை.
திமுகவில் இருப்பவர்கள், வட்டத்தில் இருந்து மாவட்டம் வரை அவர்கள் மட்டும்தான் காவல்துறையினராக இருப்பார்கள். அம்மா ஆட்சியில் இதையெல்லாம் செய்ய முடியுமா? இப்போது இருப்பது அம்மா ஆட்சி அல்ல, இப்போது எது வேண்டுமானாலும் செய்யலாம். பெட்டியோடு சென்றால் எது வேண்டுமானாலும் செய்யலாம். காசு கொடுத்தால் பதவியைக் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள்.
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விட்டால், தமிழ்நாட்டு மக்களின் நிலை என்னவாகும் என்பதை தயவுசெய்து மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் செய்வதே எங்களது ஒரே நோக்கம். அதற்காக அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
பாண்டிச்சேரி அரசு கவிழ்ந்ததற்கு ஸ்டாலின்தான் காரணம். இதை சிறுபான்மை மக்கள் தயவுசெய்து எண்ணி பார்க்க வேண்டும் என டிடிவி தினகரன் விமர்சித்தார்.