அதிமுகவை அழிக்க ஓ.பி.எஸ். செய்யும் சதி நிறைவேறாது. டிடிவி தினகரன்

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (07:17 IST)
அதிமுக சமீபத்தில் சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணி இரண்டாக பிரிந்து ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக சிறையில் இருப்பதால் அவருக்கு பதில் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியின் முக்கிய பணிகளை கவனித்து வரும் நிலையில் ஓபிஎஸ் அணியினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகிறார்




இந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தினகரன் அதிமுக என்னும் இயக்கத்தை அழிக்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சதி செய்வதாக தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த சிலர் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்வு, கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் பேசியபோது, 'முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைவைத் தொடர்ந்து, பி.எச்.பாண்டியன் பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டார். இப்போது, அதே பி.எச்.பாண்டியனுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து அதிமுக என்னும் இயக்கத்தை அழிக்க சதியில் ஈடுபடுகிறார். அவர்களது சதிச் செயல்கள் அனைத்தும் தவிடு பொடியாகும். இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்று கூறினார்
அடுத்த கட்டுரையில்