திமுக ஆட்சி கவிழ்வதற்கு மின்கட்டண உயர்வு தான் காரணமாக இருக்கும்: டிடிவி தினகரன்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (08:08 IST)
மின் கட்டண உயர்வு தான் திமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருப்பூரில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பேசிய அவர் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருவர் திமுக ஆட்சியை கவிழ்க்க போதுமானவர் என்றும்,  திமுக ஆட்சி கவிழ்வதற்கு மின்கட்டண உயர்வு ஒன்று போதும் என்றும் கூறினார்.
 
 திமுக கூட்டணி கட்சியினர் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காக்கின்றனர் என்றும் திமுக மட்டுமின்றி ஒட்டுமொத்த கூட்டணியும் தோல்வி அடையும் என்றும் அவர் கூறினார்
 
எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பொதுக்குழுவைக் கூட்டி முதலமைச்சர் ஸ்டாலினையே பொதுச்செயலாளர் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கடந்த ஆட்சியில் அதிமுக ஊழலை கண்டித்தேன், ஆனால் அவர்கள் திருந்தவில்லை இப்போது அனுபவிக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
விலைபோகாத சிங்கங்கள் இன்னும் அதிமுகவில் உள்ளனர் என்றும் அவர்கள் கண்டிப்பாக சரியான நேரத்தில் முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்