நானும் ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்படுவோம்: டிடிவி தினகரன் பேட்டி..!

Mahendran
புதன், 17 ஜனவரி 2024 (16:15 IST)
நானும் ஓபிஎஸ் அவர்களும் இணைந்து எதிர்காலத்தில் அரசியலில் செயல்படுவோம் என அமமுக கட்சி பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இன்று கடலூரில் டிடிவி தினகரன் செய்தி அவர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் மற்றும் நான் ஆகிய இருவரும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட முடிவு எடுத்திருக்கின்றோம். 
 
கூட்டணி அமைத்து தேர்தலில் சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே தணிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதை குறைத்து உள்ளோம் 
 
நானும் ஓபிஎஸ் வருங்காலத்தில் இணைந்து அரசியலில் செயல்படுவோம் என்று டிடிவி தினகரன் கூறியதை அடுத்து இருவரும் பாஜக அணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது இணைந்து போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்