அதுக்குள்ள டாஸ்மாக் திறக்க என்ன அவசரம்? – டிடிவி கண்டனம்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (08:08 IST)
சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறையாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்ததன் காரணமாக சென்னையில் இதுநாள் வரை புறநகர் பகுதிகள் சிலவற்றை தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் சென்னையில் தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதால் நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பிற்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, மக்கள் நலனில் அக்கறையில்லாத மிக மோசமான முடிவாகும். இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறந்த பிறகே கொரோனா பாதிப்பு அதிகமானதாக தெரிவித்துள்ள அவர், மக்கள் எப்படி போனாலும் வியாபாரம் ஆக வேண்டும் என அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்