இது என்ன மிலிட்டரி ஆட்சியா? - தினகரன் விளாசல் (வீடியோ)

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (16:03 IST)
கவர்னருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டு தண்டனை எனக் கூறுவது மிலிட்டரி ஆட்சி போல உள்ளது என கரூரில் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
 
கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கட்சி கொடியேற்றுதல் மற்றும் கரூர் அம்மா மக்கள் முன்னேற்றக்  கழக நகரச் செயலாளர் கோல்டு ஸ்பாட் ராஜா இல்ல திருமண நிகழ்ச்சியில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
கவர்னர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.  காமராஜர் பல்கலைக்கழக பெண் பேராசிரியர் விவகாரத்தில் கவர்னர் பெயரை கூறப்படுகிறது. கவர்னர் ஆய்வு செய்வதை எதிர்த்து போராடுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு  உரிமை உண்டு. அதற்கு 7 ஆண்டு தண்டனை என மிரட்டுவது மிலிட்டரி ஆட்சி போல உள்ளது.   இது ஜனநாயக நாடா அல்லது பாகிஸ்தான்போல அதிபர் நாடா என தெரியவில்லை.
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு இருக்கும்போது,  கவர்னர் ஆய்வு செய்வதை எதிர்கட்சிகள் எதிர்க்கின்றேன்., தூத்துக்குடி செல்ல முதல்வர் பயப்படுகிறார்.  சேலம் சென்று பசுமை வழிச் சாலை குறித்து மக்களுக்கு  திட்டம் குறித்து விளக்க வேண்டும்.  பசுமை வழிச் சாலை குறித்து குரல் கொடுப்பவர்களை கைது செய்வது ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும். தேர்தல் வந்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.
 
இயக்குநர் பாரதிராஜா மீது வழக்குப் பதிவு,  இயக்குநர் கெளதமன் கைது சர்வாதிகாரம். அவர்கள் மக்களுக்காக போராடி வருகிறார்கள்  என்றார். மேலும் கவர்னரை பெரிது படுத்த வேண்டாம் அவர் மீதே குற்றச்சாட்டு எழுகின்றது. மேலும், நேற்று ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் 3 ஆயிரம் நபர்கள் வந்து எங்களது (அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்) கட்சியில் சேர்ந்தனர். அதில் ஒரு தொலைக்காட்சி, தி.மு.க வில் இருந்து வந்தவர்கள் என்பதினால் அந்த ஒரு தனியார் தொலைக்காட்சியானது திரித்து எங்களது கூட்டத்தில் கூட்டம் இல்லை என்றும் அதை நான் சமாளித்ததாக கூறி ஒளிபரப்பி வருவதையும் (கலைஞர், சன்) தொலைக்காட்சியை சுட்டிக்காட்டினார்.
 
நீதிமன்றத்தின் உத்திரவிற்கிணங்க, ஒரு இடத்தில் இவ்வளவு நபர்கள் தான் கூடுவார்கள் என்று விதிமுறை உள்ளது. அதை விட்டு, தி.மு.க வில் இருந்து எங்களது கட்சியில் சேருகின்றார்கள் என்பதற்காக மாற்றி ஒளிபரப்பக் கூடாது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
-சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்