டிடிவி தினகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்: ஜாமீன் கிடைக்குமா?

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (05:52 IST)
இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டு அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 4வது நாளாக விசாரணை நடத்திய டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தினகரனை கைது செய்தனர்.



 


இந்த நிலையில் இன்று தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இன்று பிற்பகம் 2 மணி அளவில் தினகரன் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் அந்த சமயத்தில் தினகரனின் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தினகரன் செல்வாக்கு உடையவர் என்பதால் அவர் சாட்சிகளை கலைக்க முற்படலாம் என்று அரசு தரப்பில் இருந்து ஜாமீன் பெற எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்