உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தயாரித்த சாட்ஜிபிடி (ChatGPT) ஏஐ புரட்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பல ஏஐ தொழில்நுட்பங்களின் வருகையால் பலதுறைகளிலும் Automation வேகமாக நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்தும் சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகிளின் ஜெமினி ஏஐ Gemini AI போன்றவை போட்டியிட்டு வரும் நிலையில் சீனாவும் தனது பங்கிற்கு DeepSeek AI என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
சாட்ஜிபிடில் எழுத்துப்பூர்வமான கேள்வி பதில்கள் தவிர்த்த பிற சேவைகளுக்கு சந்தா செலுத்த வேண்டியுள்ள நிலையில் DeepSeek AI அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்குவதால் அதற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிடிஎஃப் கோப்புகள், படங்களை பதிவேற்றினால் கூட அதில் உள்ள தகவல்களை எழுத்து வடிவத்திற்கு Extract செய்து தருகிறது.
தற்போது அமெரிக்காவில் ஐஃபோன் பயனாளர்களிடையே சாட்ஜிபிடையை விட டீப்சீக்கிற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K