கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வந்த வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்க கடலில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கும் நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட வங்க கடலோர பகுதிகள் பெருமழையை சந்திக்கின்றன. 2024ம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாக்குமரி வரை பல மாவட்டங்களும் பெருமழை, வெள்ளத்தை சந்தித்தன.
இந்த வடகிழக்கு பருவமழை ஜனவரியில் பொங்கல் வரையிலுமே நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், பொங்கல் நாளிலேயே சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் இந்த வடகிழக்கு பருவமழை தற்போது முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 15 தொடங்கி 100 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த பருவமழையால் நீர்நிலைகள் முழுவதும் நிரம்பியுள்ளன. தற்போது பனிக்காலம் காரணமாக பலரும் குளிரில் வாடி வரும் நிலையில் பிப்ரவரி இறுதிக்கு மேல் வெயில் காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K