சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனி, இனி வரும் காலங்களிலும் விளையாடுவது சாத்தியமா என்பது குறித்து பேசியுள்ளார்.
பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனிக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருந்து வருகின்றனர். முக்கியமாக தமிழ்நாட்டில்! ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வரும் நிலையில் அவரை காண்பதற்காகவே ரசிகர்கள் பலரும் மைதானம் வருகின்றனர்.
கடந்த ஐபிஎல் போட்டியில் புதிய கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக விலக, தோனி கேப்பிட்டன்சி செய்தார். ஆனாலும் அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த சீசன்களில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி இருந்து வருகிறது.
சமீபத்தில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய தோனி “அடுத்த சீசனில் ருதுராஜ் வந்துவிடுவார். அதன்பிறகு எல்லாம் சரியாகிவிடும். கடந்த ஐபிஎல் போட்டியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை என சொல்ல மாட்டேன். ஆனால் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
டிசம்பரில் நடைபெறும் மினி ஏலத்தில் மேலும் சில வீரர்களை எடுக்க உள்ளோம். அடுத்து 5 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு என் கண்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உடல் தகுதிக்கு எனக்கு டிக் மார்க் கிடைக்கவில்லை. கண்களை வைத்து விளையாட முடியாதே” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K