காஷ்மீர் விவகாரத்தில் ’நாட்டாமை ’ செய்ய தயார் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (14:41 IST)
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370 மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகளை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகியவை 2 புதிய யூனியன் பிரதேசங்களாக இருக்கும் என்று அறிவிக்கப்ட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில மத்திய அரசின் இம்முடிவுக்கு அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது வருகிறது. இந்தியாவில் இம்முவுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீனா. அமெரிக்கா,  ஆகிய நாடுகளிலும் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை விடுத்தார். சீனா உதவியுடன் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கும் இதைக் கொண்டு சென்றது பாகிஸ்தான். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
 
இந்நிலையில் இம்ரான் கான், டிரம்பிடம் பேசினார். இதற்கிடையே பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் 30 நிமிடங்களுக்கு மேலாக தொலைபேசியில் பேசினார். இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தவிர்க்கும்படி இம்ரான் கானிடம் அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. 
 
இப்படியிருக்க, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், இந்தியாவில் உள்ள காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் மூக்கை நுழைப்பதை, இந்திய அரசு விரும்பவில்லை என  இந்தியா கூறியிருந்தது. அதேசமயம் இந்தியாவில் உள்விவகாரத்தில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்க் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்