பரபரக்கும் தேர்தல் களம் : உச்சத்தில் தினகரன் கொடி

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (15:00 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணிக்காய் வலை வீசி ஒரளவுக்கு தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசி முடிக்கும் நிலைக்கு வந்துவிட்டன. இதில் தேமுதிக மற்றும் அமமும மட்டுமே விலக்காக உள்ளது.
தேமுதிக ஏறக்குறைய அதிமுகவின் மெகா கூட்டணிக்குள் நுழைவதாகவே ஆகிவிட்டது. ஆனால் தொதிகளுக்காகத்தான் இன்னும் பிகு பன்னிக்கொண்டுள்ளது. 
 
தேர்தல் பரப்புரைக்காக நாளை மோடி தமிழகம் வரும் முன்னர் தேமுதிகவின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
 
இன்னொரு புறம் திமுக தமது கூட்டணிகளுக்கு தொகுகளை ஒதுக்கி தமது உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென நிபந்தனை விதித்து வருகிறது.
 
இப்படி இருக்க  தனது 19 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் , இரட்டை  இலை சின்னம் அதிமுகவுக்கு, செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றது, சசிகலா சிறை, தேர்தல் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு போன்றவற்றால் சிக்குண்டிருக்கிறார் டிடி.வி. தினகரன். 
 
தேர்தல் நெருங்விட்டாலும் இன்னும் பதற்றமில்லாமாலேயே இருக்கிறார். ஆனால் இத்தனை துயரத்தின் மத்தியில் அவருக்குள்ள ஒரே ஆறுதல் தற்போது பாமகவில் இருந்து அமமுகவிற்கு வந்துள்ள நடிகர் ரஞ்சித்.தேர்தலில் ரஞ்சித் மற்றும் தினகரனின் துதிபாடிகளால்தான் இன்னமும் தான் ஜெயிக்க முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் எல்லா தேர்தல்களும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலைப் போன்றே இருக்காதல்லவா?
 
சமீபத்தில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 123 அடி உயரம் கொண்ட தனது கட்சிக்கொடியை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புதூர் அருகேயுள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் ஏற்றிவைத்தார்.
 
மானசீகமாக தன் கட்சியை இவ்வளவு தூரம் கொண்டு வருபவர் இன்னும் தேர்தல் பற்றி மூச்சு கூட விடாமல் உள்ளார்.
தற்போது அவர் எழுப்பியுள்ள உயரமான கொடியைப் போல் வரும் தேர்தலிலும் தன் கட்சி பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் தினகரன் உள்ளார். அவரை நம்பியே அவரது தொண்டர்களும் உள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்