களத்தில் இறங்கிய திமுக: அதிமுகவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்

திங்கள், 4 மார்ச் 2019 (13:50 IST)
தேர்தலை மனதில் வைத்தே அதிமுக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்ததாகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
 
தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவியாக வழங்கும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
 
இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆளும் அதிமுக அரசு தேர்தலை மனதில் வைத்தே 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை வைத்து வாக்குகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளது.
 
ஆகவே இதனை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்