அமமுகவில் போட்டியிட ஆளே இல்லை: ஆர்.பி.உதயகுமார்

ஞாயிறு, 3 மார்ச் 2019 (21:15 IST)
தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைக்க எந்த அரசியல் கட்சிகளும் முன்வரவில்லை என்பது மட்டுமின்றி மக்களவை தேர்தலில் அமமுகவில் போட்டியிட ஆளே இல்லாமல் உள்ளதாகவும், அமமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களை டி.டி.வி. தேடிக்கொண்டிருப்பதாகவும் ஆர்.பி.உதயகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தேர்தலுக்குமுன் அமமுகவினர் அதிமுகவில் இணைந்தால் தங்களின் செல்வாக்கு மிச்சமாகும் என்பதே உண்மையான நிலை ஆகும் என்றும் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எதிர்க்க அமமுகவினர் இருக்கின்றார்களா? என்ற கேள்வியையும் அமைச்சர் முன்னிறுத்தியுள்ளார்.
 
கட்சிக்கும் சின்னத்திற்கும் அங்கீகாரம் இல்லாத காரணத்தால் அமமுகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் விரும்பவில்லை என்று தெரிவித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுகவில் இளைஞர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் முறியடித்துள்ளதாகவும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதை வரவேற்பதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
 
அமைச்சரின் இந்த கருத்துக்கு பதிலளித்த டிடிவி தினகரன், தேர்தல் முடிந்தபின்னர் யார் தேடப்படுபவர்கள் என்பது தெரியவரும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்