பிரதமர் சென்னை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் கலைவாணர் அரங்கிற்கு பிரதமர் மோடி சென்றபோது சாலையின் இருபுறத்திலும் பொதுமக்கள் திரளாக நின்று சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். அந்த நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த ஒரு நபர் ரகளை செய்ததோடு, பிரதமரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். அந்த சமயத்தில் போலீசார் அந்த நபரை எச்சரிக்கை செய்து அனுப்பினர்
இந்த நிலையில் இன்று திடீரென அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் பழனி என்றும், அவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் கூலித்தொழிலாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரதமர் கலந்து கொண்ட விழா முடிந்து ஒருவாரம் கழித்து திடீரென பழனியை போலீசார் கைது செய்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.