கார்த்திக் சிதம்பரம் கைதுக்கு பின்னால் இந்திராணி முகர்ஜி...

வியாழன், 1 மார்ச் 2018 (11:24 IST)
மும்பையை சேர்ந்த தொழிலதிபரும், தற்போது சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி தம்பதி அளித்த வாக்குமூலமே, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில் கார்த்திக் சிதம்பரம் சிக்கியதற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.

 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரை சிபிஐ நேற்று அதிரடியாக கைது செய்தது.
 
இந்நிலையில், கார்த்திக் சிதம்பரம் சிக்கியதற்கு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மும்பை தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலமே முக்கிய ஆதாரம் என்பது தெரியவந்துள்ளது.
 
கடந்த 2007ம் ஆண்டு அப்போது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தை இந்திராணி மற்றும் அவரின் கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சந்தித்து, தங்கள் நிறுவனம் வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

 
அப்போது, கார்த்திக் சிதம்பரம் நடத்தும் வர்த்தகத்திற்கு உதவுமாறும், அதற்காக வெளிநாட்டு பணத்தை அளிக்குமாறும் அவர் கேட்டுள்ளார். அதை அடுத்து டெல்லி என்று ஒரு நட்சத்திர விடுதியில் அவர்கள் கார்த்திக் சிதம்பரத்தை சந்தித்துள்ளனர். அப்போது, ரூ. 10 லட்சம் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும் கார்த்திக் கேட்டுள்ளார். எனவே, சில வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் ரூ.7 லட்சம் டாலர்கள் முகர்ஜி தம்பதி செலுத்தியுள்ளனர். அதன்பின் அவர்களின் நிறுவனத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. 
 
இதை இந்திராணி முகர்ஜி சிபிஐ-யிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி முகர்ஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்