ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது

செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (10:28 IST)
தாய்லாந்தில் அலெக்ஸ் லெஸ்லி என்ற நபர் ஆண், பெண்களுக்கு செக்ஸ் பயிற்சி வகுப்புகள் நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அலெக்ஸ் லெஸ்லி என்பவர் தாய்லாந்தில் உள்ள பட்டயா நகரில் செக்ஸ் பயிற்சி வகுப்புகளை நடத்தப் போவதாக தனது இணையதளத்தில் அறிவித்திருந்தார். கடந்த 10 நாட்களாக பட்டயா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்ற இவரது செக்ஸ் பயிற்சி வகுப்பில் சுமார் 30 ஆயிரம் கட்டணம் செலுத்தி 40 ஆண், பெண்கள் பங்கேற்றதாக தெரியவந்தது. இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் அலெக்ஸ் லெஸ்லி வெளியிட்டிருந்தார்.
 
இதையடுத்து அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்திய போலீஸார், அலெக்ஸ் லெஸ்லி உள்பட 10 செக்ஸ் பயிற்சியாளர்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்