குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை – திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (14:26 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி ஆட்சியர் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் 1400 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தேர்தலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவித்துள்ளார். அதில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்றும், பிரச்சார நேரமான காலை 8 முதல் மாலை 8 மணி தவிர்த்த பிற நேரங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்