தொடங்கியது பேச்சுவார்த்தை.. போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் உடன்பாடு ஏற்படுமா?

Mahendran
திங்கள், 8 ஜனவரி 2024 (13:14 IST)
போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதை அடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.
 
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தற்போது சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடந்து வருகிறது,
 
தொழிலாளர் நலத்துறை இணை இயக்குனர் ரமேஷ் தலைமையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் இதுகுறித்து ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது 3வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
 
அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில்  பங்கேற்றுள்ளனர். அதேபோல் தொழிற்சங்கங்கள் தரப்பில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்