ரயில் பயணியை கொன்ற திருநங்கை தற்கொலை முயற்சி

Webdunia
ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (11:03 IST)
பிச்சை போடாததால், ரயில் பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த திருநங்கை, தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளார். 
ஆந்திர மாநிலம் தாட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா (32). இவரது நண்பர் தரம்வீரப்பா (20) உள்பட 5 பேர் கட்டிட வேலைக்காக ரயிலில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. ரயிலில் ஏறிய திருநங்கை பயணிகளிடம் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.  சத்தியநாராயணா, தரம்வீரப்பா ஆகிய 2 பேரும் திருநங்கைக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர்.
 
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த திருநங்கை சத்தியநாராயணாவை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டார்.  படுகாயமடைந்த அவர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சத்தியநாராயணா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
இந்நிலையில் கொலை செய்த திருநங்கையை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டு வந்தனர். போலீஸார் தம்மை கைது செய்ய நேரிடும் என்பதற்காக, திருநங்கை விஷமருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்