பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் தற்போது சென்னை திரும்பி கொண்டிருக்கும் நிலையில், காவல்துறை சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை பின்வருமாறு:
வெளியூரிலிருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரணூர் சந்திப்பில் திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை நோக்கி வரும் சாதாரண வாகனங்கள் எஸ்பி கோயில் X ஒரகடம் சந்திப்பில் திரும்பி ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும்.
திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு வழியாக பயணம் செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் கனரக வாகனங்கள், திங்கட்கிழமை வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் புதிய பாலத்தில் திங்கட்கிழமை 12:00 மணி வரை, சென்னை நோக்கி ஒரு வழி போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும்.
ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து விரைவாக்க, ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்படும்.
இந்த கட்டுப்பாடுகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.