ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!

Mahendran

சனி, 18 ஜனவரி 2025 (12:49 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், நேற்றுடன் இந்த தொகுதிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பாளர் தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிந்தது.

திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று வேட்புமான பரிசீலனை தொடங்கியது.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியின் வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டதாகவும், அவருக்குரிய சின்னம் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுக வேட்பாளர் சந்திரகுமார்  வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தொகுதியில் போட்டியிடும் 15 க்கு மேற்பட்ட சுயேட்சைகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி தேதி என்ற நிலையில், அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்