கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாகவும் கிழக்கு திசை காற்று வேறுபாடு காரணமாகவும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியிருப்பதால் நவம்பர் 13 14 முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர். ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 26 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.