தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கோவில்களில் குவியும் பக்தர்கள்..!

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:11 IST)
தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெறுவதை அடுத்து விநாயகர் கோவில்களுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 
 
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இந்து மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் என்பதும் விநாயகர் கோவிலில் அன்றைய தினம் பக்தர்கள் குவிந்து வழிபாடு செய்வார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று தமிழக முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை அடுத்து  பக்தர்கள் கோவில்களில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விநாயகர் சிலைகளையும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று அதிகாலை முதலே பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில்  ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பிள்ளையார்பட்டி கோவில் உள்பட பல கோவில்களில் இன்று விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்