சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று திறப்பு.. தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி

ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (08:42 IST)
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைக்காக நடை திறக்கப்படும் நிலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் புரட்டாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
நடை திறக்கப்படும் இந்த ஐந்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் சில கட்டுப்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் விதிக்க வாய்ப்பிருப்பதாகவும் அது குறித்து அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்