இன்று தை அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்..!

Siva
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (08:49 IST)
இன்று அதாவது பிப்ரவரி 9ஆம்  தை அமாவாசை தினம் என்பதால் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்கள் புனித நீர்நிலைகளில் குவிந்திருக்கிறார்கள். 
 
தை அமாவாசை தினத்தில் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசியை பெறுவதற்காக பக்தர்கள் வழிபடுகிறார்கள்.  தை அமாவாசை தினம் மிகவும் புண்ணிய தினமாக கருதப்படும் நிலையில் இந்த தினத்தில் பக்தர்கள் கங்கை, யமுனை, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்கிறார்கள்.
 
அதேபோல் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற தலங்களிலும் பக்தர்கள் தர்ப்பணம் செய்து வருகிறார்கள். பல கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
 
ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி மற்றும் அம்பாள் திருச்சிலைகள் தை அமாவாசை தினத்தன்று அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறுகிறது.
 
 திருச்செந்தூர் முருகன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.  கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் தர்ப்பணம் செய்கிறார்கள்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்