தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் அதிகம் என்பதால் பரபரப்பு

Webdunia
புதன், 27 மே 2020 (18:30 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 817 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18545 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 817 பேர்களில் சென்னையில் 558 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12192 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 6 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 567 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 9909 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று 10,661 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து 423,018 பேர்களுக்கு மொத்தம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்