தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு இவ்வளவா?

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (20:23 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,765 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,93,599 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,103 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,011 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,408 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்