தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

வியாழன், 7 ஜூலை 2022 (15:38 IST)
தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல். 

 
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை நேற்று இரவு 8 மணிக்குள் கல்வி அனைவருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. 
 
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஒரு நபரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும் அரசுப் பள்ளிகள் கல்லூரிகளில் 10571 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்