ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

Siva

திங்கள், 27 ஜனவரி 2025 (17:27 IST)
தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ZOHO நிறுவனத்தின் தலைமை  நிர்வாக அதிகாரியாக ஸ்ரீதர் வேம்பு இருக்கும் நிலையில், அவர் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் பல நாடுகளில் ZOHO நிறுவனத்தின் கிளைகள் இருக்கும் நிலையில், மென்பொருள் சேவை வழங்குவதில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில், ZOHO நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகி உள்ள ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். அவர் எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, ZOHO  இணை நிறுவனராக சைலேஷ் குமார் என்பவர் புதிய சிஇஓ ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு இணை நிறுவனரான டோனி தாமஸ்  அமெரிக்க பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்