டாக்டரை கடத்திய கடத்தல்காரர்கள் 6 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில், அதன் பின் கையில் இருந்த 300 ரூபாயை அந்த டாக்டரிடம் கொடுத்து பத்திரமாக வீடு சென்று சேருங்கள் என்று கூறிவிட்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
அதன் பின்னர், அந்த நபர்கள் டாக்டரின் சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறு கோடி ரூபாய் வேண்டும் என்றும் மிரட்டினர். இதனை அடுத்து, அவரது சகோதரர் காவல் துறையில் புகார் அளித்த நிலையில், கடத்தல்காரர்களின் கார் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லாத வகையில் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கடத்தல் காரர்கள், டாக்டரை காரில் இருந்து இறக்கி விட்டுவிட்டு, அங்கிருந்து அவர் வீடு செல்வதற்கு 300 ரூபாய் கொடுத்துவிட்டு தப்பிவிட்டனர். அதன் பின்னர், டாக்டர் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் கடத்தல்காரர்கள் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.