9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (13:08 IST)
தமிழகத்தில் தென்மேற்கு பபருவக்காற்று காரணமாக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும், ஆகஸ்டு 12 வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்