சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (07:25 IST)
கடந்த 260 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது இந்தியாவில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான பாகிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் திடீரென ஒரு லிட்டர் பெட்ரோல் 35 ரூபாய் உயர்ந்தது என்பதும் ஆனால் இந்தியாவில் கடந்த 9 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது சாதனையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 261வது நாளாகவும் இன்று பெட்ரோல் விலை உயரவில்லை. எனவே இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனை ஆகி வருகிறது.
 
கடந்த ஒன்பது மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்