தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் குறிப்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு பின்னர் திடீரென பயங்கரமாக உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் திடீரென ஒரு கிராமுக்கு 65 ரூபாய் குறைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5802.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46416.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 140 காசுகள் குறைந்து ரூபாய் 76.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76400.00 எனவும் விற்பனையாகி வருகிறது