ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் மீது, சட்டவிரோத வருமானம் சம்பந்தமான வழக்கு ஏற்கெனவே அமலாக்கத்துறையால் தொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்போது அவரும் டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனமும் இணைந்ததாக கூறப்படும் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
அமலாக்கத்துறை தகவலின்படி, ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரில் உள்ள ரூ.27.5 கோடி மதிப்புள்ள பங்குகள் மற்றும் டால்மியா நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.377 கோடி மதிப்புள்ள நிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. இது மட்டும் இல்லாமல், டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனம் அறிவித்ததுபடி, முடக்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.793 கோடியாகும்.
இந்த விவகாரத்தில் முக்கியமான ஒன்றாக, டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனம், ஜெகனுக்கு சொந்தமான ரகுராம் சிமென்ட் நிறுவனத்தில் ரூ.95 கோடி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்குப் பதிலாக, கடப்பா மாவட்டத்தில் 407 ஹெக்டேர் நிலத்தில் சுரங்கத் துறைசார்ந்த குத்தகை உரிமை வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்த நிலமே முடக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.