இன்று ஒருநாள் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் நீட்டிப்பு!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (17:38 IST)
இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயில் நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாளை முதல் ஆயுதபூஜை விடுமுறையை ஆரம்பிக்க உள்ளதை அடுத்து சொந்த ஊர் செல்வதற்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்கு பொதுமக்கள் பயணம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த நான்கு நிலையங்களுக்கும் செல்லும் ஒரே போக்குவரத்து மெட்ரோ ரயில் என்பதால் மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்